உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கல்வி நிறுவன வாகனங்களை 2ம் நாளாக அதிகாரிகள் ஆய்வு

 கல்வி நிறுவன வாகனங்களை 2ம் நாளாக அதிகாரிகள் ஆய்வு

புதுச்சேரி: கல்வி நிறுவன வாகனங்களை 2வது நாளாக நேற்று போக்குவரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். புதுச்சேரியில் கோடை விடுமுறை முடிந்து வரும் 4ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இதையொட்டி, கோர்ட்டு உத்தரவின்பேரில், அனைத்து கல்வி நிறுவனங்களின் வாகனங்களை ஆய்வு செய்யும் பணி மேட்டுப்பாளையம் லாரி முனையத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. புதுச்சேரியில் மொத்தம் 1,164 பள்ளி வாகனங்கள் உள்ள ன. முதற்கட்டமாக நேற்று முன்தினம் 172 பள்ளி வாகனங்கள் ஆய்வுக்கு கொண்டு வரப்பட்டு, 138 வாகனங்களுக்கு தகுதிச்சான்று அளிக்கப்பட்டன. மீதமுள்ள 34 வாகனங்களில் வேக கட்டுப்பாட்டு கருவி பழுது, கதவுகள் சரியாக மூடப்படாதது, இருக்கைகள் விவரம் குறிப்பிடப்படாதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தகுதி நீக்கம் செய்யப்பட்டன. இந்நிலையில் நேற்று 2வது நாளாக நடந்த ஆய்வில் 55 பள்ளி, கல்லுாரி வாகனங்கள் வந்தன. இதில் 52 வாகனங்கள் தகுதி பெற்றன. 2 வாகனங்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டன. மீதமுள்ள வாகனங்களுக்கான ஆய்வு வரும் 10ம் தேதி வரை நடத்த உள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ