உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / குளவி கொட்டி மூதாட்டி பலி

குளவி கொட்டி மூதாட்டி பலி

வில்லியனுார் : சுல்தான்பேட்டை அடுத்த அரசூர்பேட்டை, அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் கணவரை இழந்த வீரம்மாள், 65. மகனுடன் வசித்து வந்தார். இவர், அதே பகுதியில் உள்ள மூக்கையா என் பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் வே லை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை தோப்பில் வேலை செய்தபோது தென்னை மட்டை கூண்டில் இருந்த குளவி வீரம்மாளை கொட்டியது. சிறிது நேரத்தில் மயங்கிய விழுந்த வீரம்மாளை அக்கம்பக்கத்தினர் மீட்டு வில்லியனுார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பினர். பின், புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். புகாரின் பேரில் வில்லியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை