உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / ராஜிவ் சிக்னலில் கூடுதல் போலீசார் ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்

ராஜிவ் சிக்னலில் கூடுதல் போலீசார் ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்

புதுச்சேரி: போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த ராஜிவ் சிக்னலில், கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டுமென அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் வலியுறுத்தியுள்ளார்.

அவரது அறிக்கை:

புதுச்சேரி மாநிலத்தில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப் படுகின்றனர். முக்கிய இடங்களில் போலீசார் நியமிக்கப் பட்டிருந்தாலும், போக்குவரத்து நெரிசல் குறைந்ததாக தெரியவில்லை.இந்திரா மற்றும் ராஜிவ் சிக்னல்கள் மிகவும் நெரிசலான பகுதிகளாக இருந்து வருகின்றன. குறிப்பாக மாலை நேரங்களில் ராஜிவ் சிக்னலில் இருந்து காமராஜர் சாலை பழைய கலெக்டர் அலுவலகம் வரையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் நிலை உள்ளது.இத்தகைய சூழலில் குறைவான போலீசார் நியமிக்கப்பட்டுள்ளதால், நெரிசலை கட்டுப்படுத்துவது மிக கடினமாக உள்ளது. எனவே, ராஜிவ் சிக்னல் பகுதியில் கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும்.போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் போது, வாகனங்களை மாற்று வழியில் திருப்பி விட வழிவகை செய்ய வேண்டும்.மேலும், டி.ஜி.பி., ராஜிவ் சிக்னல் உள்ளிட்ட முக்கிய சிக்னல்களை தினமும் ஆய்வு செய்து, புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசலை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !