கழிவுநீர் வாய்க்கால்களை துார் வார ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்
புதுச்சேரி: நெல்லிதோப்பு , பெரியார் நகரில் கழிவு நீர் வாய்க்கால்களை பார்வையிட்ட அ.தி.மு.க., உரிமை மீட்புக்குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் கால்வாய்களை முறையாக துார்வாரவேண்டும் என, அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார். புதுச்சேரி, நெல்லித்தோப்பு அடுத்த பெரியார் நகர் பகுதியில் 10, 11 மற்றும் 12 ஆகிய தெருக்களில் கழிவுநீர் வாய்க்கால் முறையாக துார்வாரப்படாமல் இருப்பதையும், தேங்கி நிற்கும் தண்ணீரால் உடல்நிலை பாதிக்கப்படுவதும், கொசு உற்பத்தி அதிகமாவது குறித்தும் பொதுமக்களிடமிருந்து புகார் வந்தது. அதன் பேரில், அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம் சக்தி சேகர் பெரியார் நகர் பகுதிக்கு சென்று, மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். தொடர்ந்து நகராட்சி அதிகாரிகளை தொடர்பு கொண்டு வாய்க்கால்களை உடனடியாக துார் வார நடவடிக்கை மேற்கொண்டார். மேலும், மழைக்காலம் வருவதால் வாய்க்கால்களை முறையாக துார்வாரிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.உடன் தொகுதி செயலாளர் வெங்கடேசன், முன்னாள் கவுன்சிலர் சேகர், முனியன், முனிரத்தினம், விசுவநாதன், மணி உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.