உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டி ஓம்சக்தி சேகர் திட்டவட்டம்

 நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டி ஓம்சக்தி சேகர் திட்டவட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி குயவர் பாளையம் லெனின் வீதியில் அமைந்துள்ள அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில அலுவலகத்தில், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்த முகாம் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. நெல்லித்தோப்பு தொகுதி செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் பேசியதாவது: 2026 சட்டசபை தேர்தல் பணிகள் இப்போதே துவங்கிவிட்டன என்று எண்ணி செயல்பட வேண்டும். நான் 10 ஆண்டுகள் எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது நெல்லித்தோப்பு தொகுதிக்கு செய்த நன்மைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். நீங்கள் எந்தவித தயக்கமும் கவலையும் கொள்ளத் தேவையில்லை. நான் கண்டிப்பாக நெல்லித்தோப்பு தொகுதியில் தான் 2026 தேர்தலில் போட்டியிடுவேன். நெல்லித்தோப்பு மக்களின் பேராதரவுடன் வெற்றி பெறுவேன். அனைவரும் விழிப்புடன் பணியாற்றுங்கள்' என்றார். தொடர்ந்து சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் அவசியம் குறித்து விளக்கிக் கூறப்பட்டது. மேலும் 2002ம் ஆண்டு வாக்காளர் பட்டியல் பூத் நிர்வாகிகளுக்கு வழங்கப் பட்டது. சட்டசபை பொதுத்தேர்தலை முன்னிட்டு செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. முன்னாள் கவுன்சிலர்கள் சதாசிவம், சேகர் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை