உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு

வி.மணவெளி பள்ளிக்கு கூடுதல் கட்டடம் திறப்பு

வில்லியனுார் : வி.மணவெளி அரசு தொடக்கப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடங்களை அமைச்சர் நமச்சிவாயம் திறந்து வைத்தார். அரசு பள்ளிக் கல்வி இயக்கம் சார்பில், வில்லியனுார் அடுத்த வி.மணவெளி அரசு தொடக்கப் பள்ளிக்கு ரூ.51:80 லட்சம் செலவில் கூடுதல் வகுப்பறை கட்டடம் கட்டப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. சிவா எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். கல்வித்துறை இயக்குனர் அமன்ஷர்மா முன்னிலை வகித்தார். முதன்மை கல்வி அதிகாரி குலசேகரன் வரவேற்றார். கல்வி அமைச்சர் நமச்சிவாயம் புதிய கட்டடத்தை திறந்து வைத்து பேசினார். நிகழ்ச்சியில் 5ம் வட்ட பள்ளி துணை ஆய்வாளர் புவியரசன், பள்ளி பொறுப்பாசிரியர் கலியபெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நான்காம் வட்ட பள்ளி துணை ஆய்வாளர் திருவரசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !