எம்.எல்.ஏ.,க்களுக்கு மரியாதை எதிர்க்கட்சி தலைவர் சர்டிபிகேட்
புதுச்சேரி சட்டசபையில் பட்ஜெட் உரை மீதான பொது விவாதத்தின்போது, சிவசங்கர் எம்.எல்.ஏ., தனது தொகுதியில் ரூ.100 கோடி மதிப்பிலான நலத்திட்ட பணிகள் செய்தது குறித்து விளக்கி கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் செல்வம்; இந்த முறை தான் சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களுக்கு தனி தனி அறைகள் கொடுத்து உள்ளோம். உழவர்கரை நகராட்சி இடத்தில் உங்களுக்கு எம்.எல்.ஏ., அலுவலகமும் கொடுத்து உள்ளோம் என, கூறினார்.எதிர்க்கட்சி தலைவர் சிவா பேசுகையில், 'இந்த சட்டசபையில் தான் எல்லா எம்.எல்.ஏ.,க்களுக்கும் கார், தனி தனி அறை, எம்.எல்.ஏ.,க்களுக்கு தனி மரியாதை கொடுத்துள்ளனர்' என்றார்.