உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  வாய் சுகாதார விழிப்புணர்வு

 வாய் சுகாதார விழிப்புணர்வு

பாகூர்: பாகூர் அரசு ஆண்கள் நடுநிலை பள்ளியில், உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமையாசிரியர் பத்மாவதி தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பாகூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பல் மருத்துவர் தேவி கலந்து கொண்டு, வாய் சுகாதாரம் குறித்து மாணவர்களுக்கு விளக்கமளித்தார். பள்ளி வாசலில் இருந்து, வாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் துவங்கியது. இதில், பள்ளி மாணவர்கள் பங்கேற்று வாய் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தி முக்கிய வீதிகளில் சென்று, பொது மக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். ஏற்பாடுகளை, ஆசிரியர்கள் பிரபாவதி, துரைசாமி, பாக்கியலட்சுமி, தம்பி ராஜலட்சுமி ஆகியோர் செய்திருந்தனர். ஆசிரியர் உமா மகேஷ்வரி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை