உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஆர்ச்சிட் பிசியோதெரபி மையத்தில் நாளை இலவச முகாமிற்கு ஏற்பாடு

 ஆர்ச்சிட் பிசியோதெரபி மையத்தில் நாளை இலவச முகாமிற்கு ஏற்பாடு

புதுச்சேரி: முத்தியால்பேட்டை காந்தி வீதி பெருமாள் கோ வில் அருகே உள்ள ஆர்ச்சிட் பிசியோதெரபி சிகிச்சை மையத்தில் நாளை 29ம் தேதி இலவச பிசியோதெரபி முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முகாமில் அனைத்து விதமான தோள்பட்டை சம்பந்தமான பிரச்னைகளுக்கு இலவச பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. குறிப்பாக முகாமில், தோள்பட்டை எலும்பு முறிவுக்கு பிறகு ஏற்படும் பிரச்னைக்கும் தோள் பட்டை மூட்டு விலகலுக்கு பிறகு ஏற்படும் பிரச்னைகளுக்கும் ஆலோசனை பெறலாம். மேலும், தோள்பட்டை தசை மற்றும் சவ்வு கிழிவுக்கு பிறகு ஏற்படும் பிரச்னைகளும் பெரிய வேதனையாக இருக்கும். முகாமில், இதற்கு தீர்வு பெறலாம். அத்தோடு தோள்பட்டை வலி மற்றும் இறுக்கம் சம்பந்தமான பிரச்னைகளுக்கும், பல தோள்பட்டை சவ்வு, மூட்டு எலும்பு, சதை சம்பந்தமாக அனைத்து பிரச்னைகளுக்கும் நேரில் அணுகி ஆலோசனையும் சிகிச்சையும் பெறலாம். இந்த இலவச பிசியோதெரபி முகாம் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடக்கிறது. முகாமில் பங்கேற்க விரும்புவோர் 95007-12391 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை