உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீரமைக்கும் பணி துவக்கம்

மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீரமைக்கும் பணி துவக்கம்

புதுச்சேரி : சோலை நகரில் பழுதடைந்த இரண்டு அடுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீரமைக்கும் பணியினை பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார். முத்தியால்பேட்டை, சோலை நகர் வீதியில், பொதுப்பணித்துறை பொது சுகாதாரக் கோட்டம், குடிநீர் பிரிவு மூலம் அமைக்கப்பட்ட 24 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு அடுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கடந்த 2001ம் ஆண்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இந்த மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி, தற்போது பழுதடைந்துள்ளதால், அதனை 38 லட்சம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. இப்பணியினை பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., பூஜை செய்து, துவக்கி வைத்தார். இதில், பொதுப்பணித்துறை குடிநீர் பிரிவு உதவி பொறியாளர் அன்பரசு, இளநிலை பொறியாளர் சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ