உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரசு பள்ளியில் ஓவியப்போட்டி 

அரசு பள்ளியில் ஓவியப்போட்டி 

புதுச்சேரி: அரசு பள்ளியில் நடந்த ஓவிய, பேச்சு போட்டியில் பள்ளி மாணவிகள் ஆர்வமாக பங்கேற்றனர். பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொது வாழ்க்கை, சேவையை முன்னிட்டு, நாடு முழுதும் பல்வேறு சேவை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, பள்ளி மாணவர்களுக்கான ஓவியப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டி முதலியார்பேட்டை அன்னை சிவகாமி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.  பா.ஜ., மாநில தலைவர்  ராமலிங்கம் பார்வையிட்டார். முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர், மாநில பொருளாளர் ராஜகணபதி, மாவட்ட தலைவர் கிருஷ்ணராஜ், ஓ.பி.சி., அணி தலைவர்  கோவேந்தன் கோபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.  போட்டிகளுக்கான ஏற்பாடுகளை பள்ளியின் துணை முதல்வர் செம்பியன், தலைமை ஆசிரியர் கீதா, ஓவிய ஆசிரியர் பாபு ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ