உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பாரதிதாசன் பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு

பாரதிதாசன் பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு

புதுச்சேரி : பாரதிதாசன் ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் பயின்று, சென்டாக் மூலம் அரசு கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்குப் பாராட்டு விழா நடந்தது. முத்தரையர்பாளையம் பாரதிதாசன் ஆங்கில உயர்நிலைப் பள்ளியில் பயின்று, சென்டாக் மூலம் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த மாணவர் நிர்மல்குமார், மகாத்மா காந்தி அரசு பல் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த பிரசாந்த், புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் சேர்ந்த ராஜேஷ், தமிழரசன், சிவராமன், சிவா ஆகியோருக்கு பாராட்டு விழா நடந்தது. மாணவர்களுக்கு, பள்ளி நிர்வாகம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி நிர்வாகி இளம்பிறை, தலைமையாசிரியர் குருநாதன், ஆசிரியர் பச்சையப்பன் ஆகியோர் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை