பிரிட்ஜஸ் லேர்னிங் பள்ளியில் பெற்றோர், ஆசிரியர் பயிலரங்கம்
புதுச்சேரி : புதுச்சேரி, தந்தை பெரியார் நகரில் இயங்கி வரும் பிரிட்ஜஸ் லேர்னிங் வித்யாலயா பள்ளியில், ஆட்டிசம் சொசைட்டி மற்றும் டிஸ்லெக்ஸியா அசோசியேஷன் சார்பில் பெற்றோர், ஆசிரியர்களுக்கான சிறப்பு பயிலரங்கம் நடந்தது. பள்ளியின் தாளாளர் புவனா வாசுதேவன் தலைமை தாங்கினார். ஜிப்மர் முன்னாள் டீன் மகாதேவன் வாழ்த்தி பேசினார். ஜிப்மர் குழந்தை சிகிச்சை நிபுணர் பிரசன்னா 'வீடு முதல் பள்ளி' என்ற தலைப்பில் சிறப்பு தேவைகள் கொண்ட குழந்தைகளின் உணர்ச்சி, தேவைகளை புரிந்து கொள்ளுதல், வீட்டிலேயே செய்யக் கூடிய கற்றல் செயல்முறை கள், கற்றல் நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தார். மேலும், குழந்தைகள் படிப்பு மற்றும் எழுத்து பயிற்சியில் முன்னேறுவதற்காக வழிமுறைகளை எடுத்துரைத்தார். இந்திராகாந்தி அரசு மருத்துவமனை மனநல டாக்டர் வித்யா, பெற்றோரின் மனநலம், மன அழுத்தம் மேலாண்மை மற்றும் மனச்சோர்வை சமாளிப்பது குறித்தும் பயிற்சி அளித்தார். குழந்தைகளான வீட்டு தெரபி முறைகள், மன உணர்ச்சிகளின் தேவைகள், சீரான பயிற்சிகள், பெற்றோருக்கான மன அழுத்த கட்டுப்பாடு, தன்னலம் காக்கும் நடைமுறைகள், தியானம் மற்றும் மாணவர்களுக்கு எளிய வழிகாட்டல், செயல்முறைகள் குறித்து விளக்கமளித்தார்.