ஓய்வூதிய ஆணை : எம்.பி., வழங்கல்
புதுச்சேரி: முதியோர், விதவை, ஆதர வற்றோர்களுக்கான ஓய்வூதியம், உதவித் தொகை ஆணையை செல்வகணபதி, எம்.பி., வழங்கினார். புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, முதியோர், விதவை, மற்றும் ஆதரவற்றோர், பலரும் தங்களுக்கு மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் சார்பில், வழங்கப்படும் ஓய்வூதியம், உதவித் தொகை பெற்றுத் தருமாறு எம்.பி., செல்வ கணபதியிடம் கோரிக்கை வைத்தனர். தொடர்ந்து அவர்களது மனுக்கள் மகளிர் மற்றும் குழந்தைகள் துறையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஓய்வூதிய ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. 32 பேருக்கு செல்வகணபதி, எம்.பி., ஓய்வூதியம், உதவித் தொகைக்கான ஆணையை வழங்கினார். மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறையின் இயக்குநர், துறை அதிகாரிகள், பா.ஜ., நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.