மேலும் செய்திகள்
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; விஸ்வநாதன் சாடல்
09-Oct-2024
புதுச்சேரி : புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், விடுதலை நாள் மற்றும் முதலாம் ஆண்டு விழா பொதுக்கூட்டம், கீழுர் மணி மண்டபம் அருகே நடந்தது.கழக தலைவர் ராமதாஸ் தலைமை தாங்கினார். சேர்மன் வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். புதுச்சேரி விடுதலை தினத்தையொட்டி, தேசிய கொடியும், ஆண்டு விழாவையொட்டி கழக கொடியும் ஏற்றப்பட்டது.தலைவர் ராமதாஸ், ஆண்டறிக்கை வெளியிட, செயற்குழு உறுப்பினர்கள் பெற்று கொண்டனர். துணைத் தலைவர் தனஞ்செயன் வரவேற்றார். பொதுச்செயலாளர் ராஜன் மாநில செயலாளர் மோகனசுந்தரம் வாழ்த்தி பேசினர்.மாநிலத்துணை தலைவர் நித்தியானந்தன், செயலாளர் ரவிகுமார், அணி தலைவர்கள் சந்திரன், விமலா பெரியாண்டி, காரைக்கால் மாவட்டத்தலைவர் கணபதி சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உதவி செயலாளர் ஆண்டாள் நன்றி கூறினார்.
09-Oct-2024