உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  பெத்தாங் பயிற்சி முகாம் துவக்கம் 

 பெத்தாங் பயிற்சி முகாம் துவக்கம் 

புதுச்சேரி: புதுச்சேரி மாற்று உறுப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு சங்கம் சார்பில் தேசிய அளவிலான பெத்தாங் பயிற்சி முகாம் துவங்கியுள்ளது. சங்கத் தலைவர் பத்ரீஸ் தெலமாஷ் தலைமை தாங்கினார். பெத்தாங் இந்தியா சங்க துணைத் தலைவர் பாலுசாமி, நிதி ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு நிறுவனர் ராஜ்குமார், சாகா ஸ்போர்ட்ஸ் பெத்தாங் கிளப் பொது செயலாளர் சண்முகம், பெண்கள் மற்றும் மாணவர்கள் பெத்தாங் சங்க பொதுச் செயலாளர் நிர்மல் லகார்டே, ராஜஸ்தான் மாற்று உறுப்பு விளையாட்டு சங்க பொதுச் செயலாளர் ஹர்ஷ் வர்தன்சிங் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முகாமில் அடிப்படை மற்றும் மேம்பட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்று பயிற்சி பெற்று வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி