மொபட் திருட்டு போலீஸ் விசாரணை
புதுச்சேரி: மொபட் திருடிய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி, ஒத்தவாடை வீதியைச் சேர்ந்தவர் ராமலிங்கம்,70; இவர், புதுசாரத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் காலை தனது மொபட்டை தியாகு முதலியார் வீதியில் நிறுத்தி விட்டு, பெரிய மார்கெட் சென்றார். சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து, பார்த்த போது, மொபட்டை காணவில்லை. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து புகாரின் பேரில் பெரியக்கடை போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.