ரூ.1 கோடி உடற்பயிற்சி கூடம் ஏக்கத்துடன் பார்க்கும் போலீசார்...
புதுச்சேரி கோரிமேடு போலீஸ் மைதானத்தில் அதிகாரிகளுக்கான உடற்பயிற்சி கூடம் இரண்டு ஆண்டுகளுக்கு முன், கட்டப்பட்டது. கடந்த ஜூலை மாதம் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள 50 வகையான அதிநவீன உடற்பயிற்சி சாதனங்கள் பொருத்தப்பட்டது. பெண்களுக்கு தனி பிரிவு, யோகா, சூம்பா நடன உடற்பயிற்சி உபகரணங்கள் அமைத்தனர்.கான்ஸ்டபிள் முதல் ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ்., வரையிலான அதிகாரிகள் பயிற்சி பெற அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பயிற்சி பெறும் நேரம், கான்ஸ்டபிள், சப் இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர், எஸ்.பி.,க்கள் பயிற்சி பெறும் நேரம் ஒதுக்கி உள்ளனர்.இதில் காலை மாலையில் பெரும்பாலன நேரம் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளும், அவர்களின் குடும்பத்தினர் பயிற்சி செய்கின்றனர். பகல் நேரத்தில் பணிக்கு செல்ல வேண்டும் என்பதால், உடற்பயிற்சி செய்யக்கூடிய காலை, மாலை வேளைகளில் உடற்பயிற்சி செய்ய முடியாமல் போலீஸ் அதிகாரிகளும், கான்ஸ்டபிள்களும் ஏக்கத்துடன் ஜிம்மை பார்த்து செல்கின்றனர்.