உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / போலீசார் பயிற்சி நிறைவு அணி வகுப்பு விழா

போலீசார் பயிற்சி நிறைவு அணி வகுப்பு விழா

புதுச்சேரி: புதுச்சேரியில் புதிதாக தேர்வாகிய 27 வது பேட்ஜ் பயிற்சி முடித்த 37 போலீசாரின்பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா நேற்று நடந்தது. போலீஸ் துறையில் கடந்த 2024ம் ஆண்டு பிப். 12ம் தேதி 11 பெண் காவலர்கள் உட்பட 37 புதிய போலீசார் தேர்வு செய்யப்பட்டு, பயிற்சி வகுப்புகள் துவங்கியது.அவர்களுக்கு சட்ட தேர்வுகள், கவாத்து தகுதி தேர்வுகள், துப்பாக்கி சுடும் பயிற்சி உள்ளிட்டவை அளிக்கப்பட்டன.இதையடுத்து, பயிற்சி முடித்த 27வது பேட்ஜ் போலீசார் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா கோரிமேடு மைதானத்தில் நேற்று நடந்தது.பயிற்சி முடித்த போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை, டி.ஜி.பி., ஷாலினி ஷிங் ஏற்றுக்கொண்டார். தொடர்ந்து, பயிற்சியில் சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு கோப்பைகள், சான்றிதழ் வழங்கினார்.விழாவில், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம், சீனியர் எஸ்.பி.,க்கள் கலைவாணன், நாரா சைதன்யா, அனிதாராய், பிரவீன்குமார் திரிபாதி, போலீஸ் பயிற்சி பள்ளி எஸ்.பி., ரங்கநாதன் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ