நாளை போலியோ சொட்டு மருந்து முகாம் புதுச்சேரியில் 456 இடங்களில் நடக்கிறது
புதுச்சேரி: சுகாதாரத்துறை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ; சிறு வயது குழந்தைகளைப் பாதிக்கக்கூடிய போலியோ நோயிலிருந்து பாதுகாக்க, இந்திய அரசு ஆண்டுதோறும் தீவிர போலியோ சொட்டு மருந்து மு காமை நடத்துகிறது. உலகத்தில் உள்ள 200 நாடுகளில் ஆப்கானிஸ் தான் மற்றும் பாகிஸ்தான் தவிர அனைத்து நாடுகளிலும் போலியோ நோய் ஒழிக்கப்பட்டு விட்டது. இந்த ஆண்டு, நாளை (21ம் தேதி) புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், காலை 7:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை 5 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த 74,698 குழந்தைகளும் பயனடைவர். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் 425 முகாம்களிலும், பொதுமக்கள் அதிகம் கூடுகின்ற இடங்களான பேருந்து நிலையம், ரயில்வே நிலையம், பூங்காக்கள், கோவில்கள் மற்றும் வணிக வளாகங்களில் 31 இடங்களிலும் சொட்டு மருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு ள்ளது. பொதுமக்கள், உடல் ஊனத்தை உண்டாக்கக்கூடிய போலியோ நோயிலிருந்து தங்கள் குழந்தைகளைப் பாதுகாத்துக் கொள்ள இந்த சிறப்பு முகாம்களை அணுகி பயனடையுமாறு சுகாதாரத்துறை கேட்டுக்கொள்கிறது.