மேலும் செய்திகள்
அரசு பள்ளியில் பொங்கல் விழா
12-Jan-2025
புதுச்சேரி : சாரம் எஸ்.ஆர்.சுப்பிரமணியம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியை அனிதா தலைமை தாங்கினார். பொறுப்பாசிரியர் லட்சுமிபிரியா முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் அய்யாவு அனுராதா, ஜெயலட்சுமி, மல்லிகா, கீதா, பவுலின் மேரி, காண்டீபன், சந்திரசேகரன், ஆரோக்கிய மேரி ஸ்டெல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பானையில் பொங்கல் வைத்து, சூரிய பகவானை வழிபட்டனர். பள்ளி மாணவ, மாணவியர் இடையே கோலம், ஓவியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
12-Jan-2025