பொங்கல் கலாசார நிகழ்ச்சி
புதுச்சேரி: பொங்கல் கலாசாரம் மற்றும் பாரம்பரியம் தொடர்பான நடந்த நிகழ்ச்சியில், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.லாஸ்பேட்டை, குறிஞ்சி நகர் நலச்சங்க சார்பில், வண்ண பொங்கல் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் விதமாக, நிகழ்ச்சி நடந்தது. மாணவர்கள், இளைஞர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில், திருக்குறள் ஒப்பு வித்தல், மாறுவேடம், வாத்தியக்கலை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடந்தது.தொடர்ந்து, பரதநாட்டியம், சிலம்பாட்டம், நகைச்சுவை ஆகிய நிகழ்ச்சிகளில் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும், சமூக பணியாற்றிய, முன்னாள் கவுன்சிலர் ருக்மணிக்கு விருதை, வைத்தியநாதன் எம்.எல்.ஏ., வழங்கினார். நிகழ்ச்சியில், செல்வம், ரவி உட்பட குறிஞ்சி நகர் நலச்சங்கத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.