மேலும் செய்திகள்
பள்ளி கல்லுாரிகளில் பொங்கல் விழா
11-Jan-2025
புதுச்சேரி : செல்லப்பெருமாள்பேட்டை விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் பொங்கல் விழா மற்றும் விவேகானந்தர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.விழாவில், முப்பானைகளில் சமத்துவப் பொங்கலிட்டு அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு பொங்கல் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களின் சிலம்பம், பாட்டு, நடனம் மற்றும் விவேகானந்தர் சொற்பொழிவு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன.ஏற்பாடுகளை பள்ளி முதன்மை முதல்வர் பத்மா வழிகாட்டுதலின்படி, பள்ளி முதல்வர் கீதா, நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் வளர்மதி, அலுவலக பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
11-Jan-2025