உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / முதுகலை பட்டப்படிப்பு விவரங்கள் வெளியீடு 

முதுகலை பட்டப்படிப்பு விவரங்கள் வெளியீடு 

புதுச்சேரி: காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுகலை பட்டப்படிப்பிற்கு விண்ணப்பித்தவர் களின் விவரங்கள் இணை யதளத்தில் வெளியிடப்பட் டுள்ளது. இதுகுறித்து நிறுவன இயக்குநர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் 2025-26ம் கல்வியாண்டிற்கான முதுகலை பட்டப்படிப்பிற்கு விண்ணப்பித்த, விண்ணப்பதாரர்களின் விவரங்கள், நிறுவனத்தின் இணையதளத்தில் நேற்று பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, எம்.ஏ. ஆங்கிலம், வரலாறு, பொருளா தாரம், எம்.எஸ்சி., வேதியியல், இயற்பியல், தாவரவியல், எம்.டி.டி.எம்., சுற்றுலா மற்றும் மே லாண்மை படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களின் விவரங்களில் ஏதேனும் திருத்தம் இருந்தால், வரும் 6ம் தேதி மாலை 4:00 மணிக்குள் நிறுவனத்தை அணுகி விவரங்களை திருத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ