உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மின் கம்பி அறுந்து விழுந்து 5 மணி நேரம் மின் தடை

மின் கம்பி அறுந்து விழுந்து 5 மணி நேரம் மின் தடை

அரியாங்குப்பம் : கண்டெய்னர் லாரியில் மாட்டி மின் கம்பி அறுந்து விழுந்ததால், தவளக்குப்பத்தில் 5 மணி நேரம் மின்சாரம் தடைப்பட்டது.தவளக்குப்பம், மருத்துவமனை வீதியில் இருந்து கெம்யா அப்பார்ட்மென்ட் பகுதி செல்லும் சாலையில் நேற்று காலை 10:00 மணியளவில், தனியார் கம்பெனிக்கு கண்டெய்னர் லாரி சென்றது. குறுக்கே சென்ற மின் கம்பிகள், லாரியில் சிக்கி அறுந்து விழுந்தது. மின் கம்பமும் சேதமாகி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.தகவலறிந்த, தவளக்குப்பம் இளநிலைப் பொறியாளர் திருமுருகன் மின்துறை ஊழியர்கள்சீரமைப்பு பணியில் ஈடுப்பட்டனர்.இந்த பணியால், கெம்யா அப்பார்ட்மெண்ட் குடியிருப்பு பகுதி, ஸ்ரீஅரவிந்த நகர், மருத்துவமனை வீதி உள்ளிட்ட பகுதிகளில் மதியம் 3:00 மணி வரை மின்சாரம் தடைப்பட்டது.இதனால், 5 மணி நேரம் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி