உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  கோர்க்காடு அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

 கோர்க்காடு அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

வில்லியனுார்: தனித்திறமை கண்டறியும் போட்டியில் வெற்றிபெற்று சாதனை படைத்த கோர்க்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. புதுச்சேரி ரோட்டரி சங்கம் காஸ்மாஸ் மற்றும் அருணா லேப் ட்ரஸ்ட் இணைந்து தனித்திறமை கண்டறியும் போட்டி நடத்தியது. இதில் பங்கேற்ற கோர்க்காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர். சாதனை மாணவர்களுக்கு பள்ளி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது. விழாவிற்கு பள்ளி துணை முதல்வர் முரளி தலைமை தாங்கி, சாதனை மாணவர்களை கவுரவபடுத்தி பாராட்டினார். பொறுபப்பாசிரியர் எழில்மாறன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் திருக்காமீஸ்வரன் ஆகியோர் நோக்கவுரையாறினார். அறிவியல் ஆசிரியர் அனுசுயா நன்றி கூறினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி