உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கராத்தே, சிலம்பம், யோகா மாணவர்களுக்கு பாராட்டு

கராத்தே, சிலம்பம், யோகா மாணவர்களுக்கு பாராட்டு

பாகூர்: அப்துல்கலாம் மக்கள் சாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில், கராத்தே, சிலம்பம், யோகா பயிற்சி மற்றும் நோபல் உலக சாதனை நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. ஜப்பான் ஷிட்டோ- ரியூ கராத்தே பயிற்சி பள்ளி மற்றும் அப்துல்கலாம் மக்கள் சாசன பாதுகாப்பு இயக்கம் சார்பில், கராத்தே, சிலம்பம், யோகா பயிற்சி முகாம் மற்றும் கடலுாரில் நடந்த கராத்தே, சிலம்பம் நோபல் உலக சாதனை நிகழ்வில் பங்கேற்று சாதனை படைத்த மாணவர்களுக்கு, பாராட்டு விழா கன்னியக்கோவில் மன்னாதீஸ்வரர் கோவில் திடலில் நடந்தது. அப்துல்கலாம் மக்கள் சாசன பாதுகாப்பு இயக்க தலைவர் சாண்டில்யன் தலைமை தாங்கினார். ஜமுனா ரவி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக, துணை சபாநாயகர் ராஜேவேலு, செந்தில்குமார் எம்.எல்.ஏ., பயிற்சி முகாமினை துவக்கி வைத்து, நோபல் உலக சாதனையாளர்களை பாராட்டி பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கினர். விழாவையொட்டி, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ மாணவிகள், கராத்தே, சிலம்பம், யோகா போன்ற நிகழ்வுகளை செய்து காட்டினர். சிலம்பம் மாஸ்டர் முனியப்பன், உடற்கல்வி ஆசிரியர் ரவிச்சந்திரன் வாழ்த்தி பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !