உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு சிறை

லஞ்சம் வாங்கிய அதிகாரிக்கு சிறை

புதுச்சேரி:லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட மத்திய அரசு அதிகாரி சிறையில் அடைக்கப்பட்டார். புதுச்சேரி, ரெட்டியார்பாளையத்தில், 1 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியபோது, மத்திய தொழிலாளர் உதவி ஆணையர் ரமேஷ்குமார், 32, சி.பி.ஐ., குழுவினரால் கையும், களவுமாக கைது செய்யப்பட்டார். விசாரணையில், தேனியில் இயங்கி வரும் கே.எம்.சி., அசோசியேட்ஸ் நிறுவனம், தொழிலாளர் உரிமை சான்றிதழ் பெறுவதற்காக, ரமேஷ்குமாருக்கு, புதுச்சேரியை சேர்ந்த இளங்கோ மூலம் லஞ்சம் கொடுத்தது தெரிய வந்தது. சி.பி.ஐ., குழுவினரால் கைது செய்யப்பட்ட ரமேஷ்குமார், லஞ்சம் கொடுத்த இளங்கோ இருவரையும் நேற்று காலை, மாவட்ட நீதிபதி ஆனந்தன் முன் ஆஜர்படுத்தி, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி