உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  சிறை நடைமுறைகள் போலீசாருக்கு பயிற்சி 

 சிறை நடைமுறைகள் போலீசாருக்கு பயிற்சி 

புதுச்சேரி: புதுச்சேரி, மத்திய சிறைச்சாலையில், சிறை நடைமுறைகள் குறித்து போலீசாருக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது. புதுச்சேரியில், போலீஸ் துறையில் ஏட்டாக பணிபுரிந்தவர்களுக்கு, ஏ.எஸ்.ஐ., ஆகவும், ஏ.எஸ்.ஐ.,கள், எஸ்.ஐ., ஆகவும் சமீபத்தில் பதவி உயர்வு பெற்றனர். இதில் ஏ.எஸ்.ஐ.,க்கு 45 நாட்கள், எஸ்.ஐ.,க்கு 90 நாட்கள் கோரிமேடு போலீஸ் பள்ளியில், பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, போலீசில் பயிற்சி பெறுபவர்களுக்கு சிறை நடைமுறைகள் குறித்து தெரிந்துகொள்ள சிறைக்கு அழைத்து சென்று பயிற்சி அளிப்பது வழக்கம்.இந்நிலையில், போலீஸ் பயிற்சி பள்ளி எஸ்.பி., ரங்கநாதன் தலைமையில் பயிற்சி போலீசார் 60 பேர் ஒருநாள் பயிற்சிக்காக புதுச்சேரி மத்திய சிறைக்கு நேற்று காலை சென்றனர். அங்கு சிறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் சிறை நடைமுறைகள் குறித்து பயிற்சி போலீசாருக்கு விளக்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை