உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  தனியார் நிறுவன ஊழியர் துாக்கிட்டு தற்கொலை

 தனியார் நிறுவன ஊழியர் துாக்கிட்டு தற்கொலை

வில்லியனுார்: வில்லியனுார் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் நெல்லையன், 32. இவர், வடமங்கலத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இவருக்கு, குடல்புண், நீரிழிவு உள்ளிட்ட பல்வேறு நோய்களால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 7ம் தேதி வீட்டின் படுக்கை அறையில் மின் விசிறியில் துாக்குப் போட்டுக் கொண்டார். அவரை மீட்டு, புதுச்சேரி அரசு மருந்துவமனையில் சேர்த்தனர். தொடர் சிகிச்சையில் இருந்த நெல்லையன், சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் இறந்தார். இது குறிந்து மனைவி ஷர்மிளா, கொடுத்த புகாரின் பேரில் வில்லியனுார் போலீஸ் உதவி சப் இன்ஸ்பெக்டர் ஸ்டாலின் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !