உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / மாநில அளவிலான கபடி போட்டி; வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கல்

மாநில அளவிலான கபடி போட்டி; வெற்றி பெற்ற அணிக்கு பரிசு வழங்கல்

வில்லியனுார்: கொம்பாக்கத்தில் மாநில அளவிலான 14வது சப் ஜூனியர் கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர். புதுச்சேரி மாநில கபடி சங்கத்தின் அனுமதி குழு மற்றும் அம்மன் பிரதர்ஸ் அணி இணைந்து கொம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் 14வது சப் ஜூனியர் கபடி சேம்பியன்ஷிப் போட்டி நடந்தது. புதுச்சேரி மாநிலத்தில் பதிவு பெற்ற கபடி சங்கத்தை சேர்ந்த 34 ஆண்கள் பிரிவு அணிகளும், 10 பெண்கள் பிரிவு அணிகளும் கலந்துகொண்டனர். இரண்டு நாட்கள் நடந்த கபடி போட்டியில் பல்வேறு சுற்றுகளில் விளையாடினர். ஆடவர் பிரிவில் திருவண்டார்கோயில் ஸ்போர்ட்ஸ் கிளப் பணி முதல் பரிசு பெற்றது. இரண்டாம் இடத்தை பங்கூர் பிரசாத் கபடி அணியும், மூன்றாவது இடத்தை அபிஷேகபாகம் சேதிலால் அணியும், நான்காவது இடத்தை கொம்பாக்கம் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும் பெற்றது.மகளிர் பிரிவில் அரியாங்குப்பம் ஜெயசிஸ்டர் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி முதலிடம் பிடித்தது. பிச்சைவீரன்பேட் கடல் புறா அணி இரண்டாம் இடத்தையும், வில்லியனுார் மறவர் மகளிர் அணி மூன்றாம் இடத்தையும், இருளையன்சந்தை ராஜா ஸ்போர்ட்ஸ் கிளப் அணி நான்காம் இடத்தையும் பிடித்தது. வெற்றி பெற்ற இரு அணிகளுக்கும் கபடி சங்க நிர்வாகிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ