உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  இலவச மனைப்பட்டா வழங்க கோரி மறியல்

 இலவச மனைப்பட்டா வழங்க கோரி மறியல்

அரியாங்குப்பம்: அபிஷேகப்பாக்கத்தில் 500க்கும் மேற்பட்ட குடு ம்பத்தினர் வசித்து வருகின்றன. இவர்கள் மனைப்பட்டா வழங்க கோரி, கடந்த ஆட்சியில், ஆதிதிராவிடர் நலத்துறையில் விண்ணப்பித்திருந்தனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன், அபிஷேகப்பாக்கத்தில் 97 பேருக்கு இலவச மனைப்பட்டாவை அதிகாரிகள் வழங்கினர். அதையடுத்து, இலவச மனைப்பட்டாவிற்கு விண்ணப்பம் செய்திருந்த, அபிஷேகப்பாக்கத்தில் குடியிருக்கும் 50க்கும் மேற்பட்டோர் 40 ஆண்டுகளாக வசிக்கும் தகுதியான எங்களுக்கு இலவச மனைப் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி சாலை மறியலில் நேற்று ஈடுபட்டனர் . தகவலறிந்த, தவளக்குப்பம் இன்ஸ்பெக்டர் சத்தியநாராயணன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர், மேலும், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குனரை, மொபைலில் தொடர்பு கொண்டு இன்ஸ்பெக்டர் பேசினார். 2 நாட்களில் அப்பகுதி மக்களை அ ழைத்து பேசுவதாக இயக்குனர் தெரிவித்ததை, இன்ஸ்பெக்டர் பொதுமக்களிடம் கூறியதை அடுத்து, மறியல் செய்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மறியலால் தவளக்குப்பம் - கரிக்கலாம்பாக்கம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை