உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அங்கன்வாடி ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

அங்கன்வாடி ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய கோரி ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தின் சார்பில், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. புதுச்சேரி அங்கன்வாடி ஊழியர்கள் சங்கத்தின் சார்பில், ஒப்பந்த அடிப்படையில் பணி புரிந்து வரும் 175 ஊழியர்களை பணி நிரந்தரம் செய்துவிட்டு, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை யின் மூலம் மீதமுள்ள பணியிடங்களை மட்டும் பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை, வில்லியனுார் திட்ட அலுவலகம் -1 எதிரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் திட்டம் -1 தலைவர் சுமதி தலைமை தாங்கினார். சம்மேளன தலைவர் ரவிச்சந்திரன், செயல் தலைவர் ராதாகிருஷ்ணன், பொதுச்செயலாளர் முனுசாமி, அமைப்பு செயலாளர் சிவஞானம், அங்கன்வாடி சங்க செயலாளர் தமிழரசி, பொருளாளர் செல்வராணி ஆகியோர் கண்டன உரையாற்றினர். அமைப்பு செயலாளர் லலிதா நன்றி கூறினார். செயலவை உறுப்பினர் வெற்றிவேல், செய்தி தொடர்பாளர் நமச்சிவாயம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ