உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / தீபாவளி உதவித்தொகை கேட்டு போராட்டம்

தீபாவளி உதவித்தொகை கேட்டு போராட்டம்

புதுச்சேரி; தீபாவளி உதவித்தொகை வழங்காததால், அமைப்பு சாரா சங்க அலுவலத்தை முற்றுகையிட்டு, தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையொட்டி, அமைப்பு சாரா தொழிலாளர்கள், 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு, உதவித்தொகையாக ரூ.1,500 வழங்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.தீபாவளி பண்டிகை முடிந்து இரு வாரங்களாகி விட்ட நிலையில், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படவில்லை. இதனால் ஆட்டோ தொழிலாளர்கள், சாலையோர வியாபாரிகள், வீட்டு வேலை செய்யும் பெண்கள், தையற் தொழிலாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர், நேற்று காலை சப்ரென் வீதியில் உள்ள, அமைப்பு சாரா நலச்சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.இதில், சி.ஐ.டி.யூ., பொதுச்செயலாளர் சீனிவாசன், துணைத் தலைவர் மதிவாணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், இரு தினங்களில் உதவித்தொகை வழங்கப்படும் என உறுதி அளித்ததால், அனைவரும் கலைந்து சென்றனர்.உதவித்தொகை வழங்காவிட்டால், மீண்டும் போராட்டம் நடத்தப்படும் என, அமைப்பு சாரா தொழிலாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ