உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / கண்டன ஆர்ப்பாட்டம் 

கண்டன ஆர்ப்பாட்டம் 

புதுச்சேரி; புதுச்சேரி நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து கூட்டமைப்பு, ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.டி.யூ.சி. கூட்டு போராட்டக்குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் உள்ளாட்சித்துறை நுழைவு வாயில் எதிரில் நடந்தது.கூட்டுபோராட்டக்குழு ஆலோசகர் ஆனந்த கணபதி தலைமை தாங்கினார். கன்வீனர்கள் வேளாங்கண்ணிதாசன், கலியபெருமாள், முருகையன், சகாயராஜ், மன்னாதன் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் சம்மேளன செயல் தலைவர் ராதாகிருஷ்ணன், கவுரவத் தலைவர் பிரேமதாசன், ஐ.என்.டி.யூ.சி., மாநில தலைவர் பாலாஜி, ஏ.ஐ.டி.யூ.சி., மாநில பொருளாளர் அந்தோணி வாழ்த்துரை வழங்கினர்.புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு கவுரவத் தலைவர் சேஷாச்சலம் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு அறிவித்த 7 வது ஊதியக்குழு படி நிலுவையில் சம்பளம் வழங்க வேண்டும், நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகளில் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு அரசு நேரடியாக பென்ஷன் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷம் எழுப்பட்டது. அய்யப்பன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ