மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கல்
பாகூர்: சேலியமேடு வாணிதாசனார் அரசு உயர் நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியர் பழனிசாமி தலைமை தாங்கி, 9ம் வகுப்பு மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கினார். உடற்கல்வி ஆசிரியர் தணிகைகுமரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பு செய்தார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆசிரியர்கள் வெரோனஸ் விஜயலட்சுமி, செல்வகுமரன், சரவணன், கணேசன், சித்திரை செல்வி, சுந்தரி, செந்தில்முருகன், புஷ்பலிங்கம், செந்தில்குமரன், மதிவாணன் ஆகியோர் செய்திருந்தனர். அலுவலக உதவியாளர் வரதராசு நன்றி கூறினார்.