விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்கள் வழங்கல்
புதுச்சேரி: கனரா வங்கி சார்பில், வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது. புதுச்சேரி கனரா வங்கி உள்ளூர் விளையாட்டு வீரர்கள் மீது கவனம் செலுத்தி, வீரர்களை ஊக்குவித்து வருகிறது. மேலும், விளையாட்டு திறனை மேம்படுத்த, மாவட்ட மற்றும் தேசிய அளவில் விளையாடும் வீரர்களுக்கு, விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி புதுச்சேரியில் நடந்தது. நிகழ்ச்சியில், புதுச்சேரி கனரா வங்கி மண்டல தலைவர் தருண் சபரிநாத்ரெட்டி தலைமை தாங்கினார். பிரிவு மேலாளர் அபிேஷக்குமார் கவுசிக், தலைமை மேலாளர் ருத்ரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், விளையாட்டு வீரர்கள், கனரா வங்கி ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.