மீனவ பெண்களுக்கு ஐஸ் பெட்டி வழங்கல்
புதுச்சேரி: ராஜ்பவன் தொகுதியைச் சேர்ந்த மீன் விற்பனை செய்யும் பெண்களுக்கு இலவச ஐஸ் பெட்டியினை அமைச்சர் லட்சுமிநாராயணன் வழங்கினார்.புதுச்சேரி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் கடற்கரையோர அடிப்படை வசதிகள் வழங்குதல் திட்டத்தின் கீழ் ராஜ்பவன் தொகுதியை சார்ந்த வைத்திக்குப்பம், குருசுக்குப்பம் பகுதியில் மீன் விற்பனை செய்யும் மீனவ பெண்கள் இலவச ஜஸ் பெட்டிக்காக வேண்டி விண்ணப்பித்திருந்தனர். இவர்களின் விண்ணப்பதை பரிசிலீனை செய்து வைத்திக்குப்பம் பகுதியை சார்ந்த 173 மீனவ பெண்களுக்கும், குருசுக்குப்பம் பகுதியை சார்ந்த 92 மீனவ பெண்கள் என மொத்தம் 265 பேருக்கு இலவச ஜஸ் பெட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில் அமைச்சர் லட்சுமிநாராயணன் ஐஸ் பெட்டிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் மீன்வளத்துறை இயக்குநர் முகமது இஸ்மாயில், திட்ட அதிகாரி மீரா சாஹிப் மற்றும் வைத்திக்குப்பம், குருசுக்குப்பம் பஞ்சாயத்து தலைவர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.