மேலும் செய்திகள்
பெண்கள் ஹாக்கி: இந்தியா ஆறுதல் வெற்றி
04-May-2025
புதுச்சேரி : ஆஸ்துமா நோயாளிகளுக்கு உயிர் காக்கும் மருந்து பென்ரலிசுமாப், பிம்ஸ் நுரையீரல் சிகிச்சை பிரிவில் தரப்படுவதாக நுரையீரல் நிபுணர் ஆண்டோனியஸ் மரிய செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:ஆஸ்துமா என்பது நுரையீரலில் ஏற்படும் நாட்பட்ட அழற்சி நிலையாகும். இதனால் மூச்சு திணறல், மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். இதற்கு முக்கிய காரணம் சுவாச குழாய் உட்படலத்தில் ஏற்படும் வீக்கம் அல்லது அடைப்பு ஆகும்.பென்ரலிசுமாப் என்ற ஒற்றை வகை எதிர்ப்பு மருந்து, ஆஸ்துமா நோயாளிகளுக்கு பிரத்யோகமாக உருவாக்கப்பட்ட உயர் சிகிச்சை முறையாகும். இது அமெரிக்கா, ஐரோப்பா நாடுகள் மற்றும் இந்தியாவின் சில நகரங்களில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.புதுச்சேரியில் முதன் முறையாக பிம்ஸ் மருத்துவ கல்லுாரி நுரையீரல் மருத்துவ சிகிச்சை பிரிவில் நீண்ட நாட்கள் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு, வழக்கமான சிகிச்சை முறை பயன் தராத நோயாளிகளுக்கு இந்த மருந்து செலுத்தப்படுகிறது.இது ஆஸ்துமா நோயால் ஏற்படும் மூச்சு திணறலை கட்டுப்படுத்தி, இன்ஹேலர் மற்றும் ஸ்டெராய்டு பயன்பாட்டை குறைக்கிறது. இதன் மூலம் தீவிர ஆஸ்துமா நோயாளிகளுக்கு நம்பிக்கை தரும் சிகிச்சை வழங்க முடியும். தீவிர ஆஸ்துமா நோயாளிகளுக்கு இந்த நவீன சிகிச்சை மற்றும் ஆலோசனை பிம்ஸ் நுரையீரல் சிகிச்சை பிரிவில் தரப்பட்டு வருகிறது' என்றார்.
04-May-2025