உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / இலவச மருத்துவ கல்வி உபகரணங்கள் வழங்கல்

இலவச மருத்துவ கல்வி உபகரணங்கள் வழங்கல்

புதுச்சேரி: அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ், இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லுாரிக்கு தேர்வாகியுள்ள மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. புதுச்சேரி அரசு அனைத்து ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கம் சார்பில், அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில், 2024- - 2025ம் கல்வியாண்டிற்கு 14 மாணவர்கள் தேர்வாகியுள்ளனர். இம் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு மருத்துவ பாடப் புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி கல்வித்துறை வளாகத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு, கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் தலைமை தாங்கி, மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார். கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி, இணை இயக்குனர் சிவகாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் செந்தில்குமார், பொதுச் செயலாளர் மூர்த்தி பூங்குன்றன், பொருளாளர் ஜவர்ஹலால் நேரு, தலைமையாசிரியர் பிரிவு தலைவர் பாலமுருகன், துணைத்தலைவர் பிரபு கணேஷ், தொடக்கப்பள்ளி ஆசிரியர் பிரிவு தலைவர் சிவப்பிரகாசம், இணை பொதுச்செயலாளர் வாழுமுனி மற்றும் சங்க உறுப்பினர்கள் கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை