உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் தெருமுனை பிரசாரம்

பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் தெருமுனை பிரசாரம்

புதுச்சேரி; பி.ஆர்.டி.சி., தினக்கூலி மற்றும் ஊழியர்கள் சங்கம் சார்பில் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி தெருமுனை பிரசாரம் நடந்தது.புதுச்சேரி பி.ஆர்.டி.சி.,யில் 14 ஆண்டுகால பணிபுரியும் மகளிர் கண்டக்டர்கள், 10 ஆண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்த டிரைவர்கள், கண்டக்டர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது.அதன் ஒருபகுதியாக, புதுச்சேரி முழுதும் பல்வேறு இடங்களில் பி.ஆர்.டி.சி., தினக்கூலி மற்றும் ஊழியர்கள் சங்கம், அரசு ஊழியர்கள் சம்மேளனம் சார்பில் தெருமுனை பிரசாரம் நேற்று நடந்தது.தமிழ்ச் செல்வன் தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் வேலையன், பாஸ்கர், வடிவேல், திருமாறன், அருள் மணி முன்னிலை வகித்தனர். சம்மேளன நிர்வாகிகள் பிரேமதாசன், ரவிச்சந்திரன், ராதாகிருஷ்ணன், முனுசாமி, ஜவகர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.சம்மேளன மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ