உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / எஸ்.பி.,க்கள் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் 

எஸ்.பி.,க்கள் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் 

புதுச்சேரி: எஸ்.பி.,க்கள் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது.புதுச்சேரி சட்டம் ஒழுங்கில் தீர்க்க முடியாத பிரச்னைகளை தீர்வு காண, அனைத்து போலீஸ் நிலையத்திலும் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் சமீபத்தில் துவக்கப்பட்டது. இக்கூட்டங்களை எஸ்.பி.,க்கள் ஆய்வு செய்யவும் அறிவுறுத்தப்பட்டது.அந்தந்த போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களால் தீர்க்க முடியாத பிரச்னையை மீண்டும் அவர்களிடமே கொடுத்தால் எப்படி தீர்க்க முடியும் என கேள்வி எழும்பியது.இதனால் சீனியர் எஸ்.பி., கலைவாணன், ஒவ்வொரு சரகத்திலும் எஸ்.பி., தலைமையில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடத்த உத்தரவிட்டார். அதன்படி, நேற்று நகர பகுதி (கிழக்கு) சரகத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்தில் நடந்தது. டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் கலந்து கொண்டார்.தெற்கு சரகத்திற்கு உட்பட்ட அரியாங்குப்பத்தில் நடந்த கூட்டம் எஸ்.பி., பக்தவச்சலம், மேற்கு பகுதி மங்கலம் போலீசில் நடந்த கூட்டம் எஸ்.பி., வம்சீதரெட்டி தலைமையிலும் நடந்தது. மேலும், வடக்கு சரகத்திற்கு உட்பட்ட ரெட்டியார்பாளையம் போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி