உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சன்வேயில் உணவு திருவிழா

சன்வேயில் உணவு திருவிழா

புதுச்சேரி : சன்வே ஜி.ஆர்.டி கிராண்ட் ஓட்டலில் 'டேஸ்ட் ஆப் இந்தியா' இசை விருந்துடன் உணவு திருவிழா நடந்து வருகிறது.புதுச்சேரி சன்வே ஜி.ஆர்.டி கிராண்ட் ஓட்டலில் இந்தியாவின் பல்வேறு மாநில கலாசார சூழலில் இசை விருந்துடன் உணவு திருவிழா நடைபெறுகிறது. 'டேஸ்ட் ஆப் இந்தியா' என்ற உணவு திருவிழா கடந்த 26ம் தேதி துவங்கி நாளை 4ம் தேதி வரை நடைபெறுகிறது.இந்த உணவு திருவிழாவில் ஓட்டல் தலைமை உணவு நிபுணர் மாருதிகுமார் தலைமையில், கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரையில் உள்ள பல்வேறு மாநிலத்தின் பாராம்பரிய உணவு வகைகள் தயாரிக்கப்படுகின்றது. இதில் 6- நான் வெஜ், 12-செலாட், 18-இனிப்பு, 16 வெஜிடேரியன் என மொத்தம் 52 வகையான உணவுகள் இடம் பெற்றுள்ளது. சார்ட் வகையில் தோசை, அடை என ஒவ்வொரு நாளும் ஒரு வகை பரிமாறப்படுகிறது.குறிப்பாக தமிழ்நாடு இறால் மாங்க குழம்பு, மச்சக்க சாலன் மீன்குழம்பு, காஷ்மீர் பிரியாணி, நல்லி மட்டன் குருமா, பஞ்சாப் லாராகோஷ் பஞ்சாபி குழம்பு ஆகியவை இடம்பெற்றுள்ளது. உணவு விருந்துடன், இசை (லைவ் மியூசிக்) விருந்தும் இடம் பெற்றுள்ளது சிறப்பாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை