புதுச்சேரி அரசின் காலண்டர் வெளியீடு
புதுச்சேரி: புதுச்சேரி அரசின் 2025ம் ஆண்டிற்கான காலண்டரை முதல்வர் ரங்கசாமி வெளியிட்டார்.புதுச்சேரி அரசு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையின் மூலம் 2025-ம் ஆண்டுக்கான மாத காலண்டர் வெளியீட்டு விழா சட்டசபையில் முதல்வர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.இதில் முதல்வர் ரங்கசாமி 2025 ம் ஆண்டுக்கான மாத காலண்டரை வெளியிட்டார்.சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமிநாராயணன், எம்.எல்.ஏக்கள் பாஸ்கர், லட்சுமிகாந்தன் மற்றும் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.இந்த காலண்டரில் உலக சுற்றுலா தரவரிசையில் புதுச்சேரிஇரண்டாம் இடம் பெற்றுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், புதுச்சேரியின் வரலாற்று சிறப்பு மிக்க கோவில்கள், மசூதி, பேராலயம் போன்றவற்றின் புகைப்படங்கள் மிகவும் நேர்த்தியான முறையில் அச்சிடப்பட்டுள்ளது.