உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சர்வதேச கிக் பாக்சிங் போட்டி புதுச்சேரி வீரர்கள் சாதனை

சர்வதேச கிக் பாக்சிங் போட்டி புதுச்சேரி வீரர்கள் சாதனை

புதுச்சேரி: சர்வதேச கிக் பாக்சிங் போட்டியில் பதக்கம் பெற்று சாதனை படைத்த புதுச்சேரி வீரர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.உலக கிக் பாக்சிங் போட்டி டில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச உள் விளையாட்டு அரங்கத்தில் கடந்த 1ம் தேதி முதல் 5ம் தேதி வரை நடந்தது. இப்போட்டியில், புதுச்சேரியை சேர்ந்த 12 வீரர்கள் அடங்கிய குழு, மேனேஜர் மனோ தலைமையில் இந்தியாவின் சார்பில், கலந்து கொண்டு பதக்கங்கள் குவித்தனர்.இதில் சீனியர் பிரிவில் மோகன்ராம், (85 கிலோ பிரிவு) வெள்ளிப் பதக்கம் மற்றும் வெண்கலப் பதக்கம், யோக விக்னேஷ் சீனியர் (60 கிலோ பிரிவு) வெண்கல பதக்கம், ராஜகணபதி சீனியர் (55 கிலோ பிரிவு ) வெண்கல பதக்கங்கள் பெற்று புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை சேர்த்தனர்.அவர்களுக்கு பாராட்டு விழா, புதுச்சேரி ரயில் நிலையத்தில் நடந்தது. விழாவில் கிக் பாக்சிங் சங்க தலைவர் இளங்கோவன், புதுச்சேரி மாநில விளையாட்டு வீரர்கள் நல சங்கத் தலைவர் வளவன், கோஜரியோ கராத்தே சங்க தலைவர் சுந்தர்ராஜ், டேக்வாண்டோ சங்க செயலாளர் மதி ஒலி, புதுச்சேரி மாநில கிக் பாக்சிங் சங்கத்தின் துணைத் தலைவர் மோகன் மற்றும் சீனியர் பயிற்சியாளர்கள் அமிர்தராஜ், பிரவீன் குமார், அய்யனார், விநாயகம் ஆகியோர் வெற்றி பெற்ற வீரர்களை வாழ்த்தி பரிசுகள் வழங்கினர்.ஏற்பாடுகளை புதுச்சேரி மாநில கிக் பாக் சிங் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை