சிறுவர் கிரிக்கெட் போட்டி புதுச்சேரி அணி அபார வெற்றி
புதுச்சேரி: சிறுமியர் கிரிக்கெட் போட்டியில் புதுச்சேரி அணி அபார வெற்றி பெற்றது.இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் 15 வயதிற்குட்பட்ட சிறுமியர் விளையாடும் 35 ஓவர் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றது.நேற்று ஒடிசா மாநிலம் கட்டக்கில் நடந்த போட்டியில், புதுச்சேரி அணியும், மேகாலயா அணியும் மோதின. முதலில் ஆடிய புதுச்சேரி அணி 35 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. புதுச்சேரி அணியின் அஸ்ரா அஞ்சும் 84 பந்தில் 52 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து ஆடிய மேகாலயா அணி 29.5 ஓவர்களில் 49 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. புதுச்சேரியின் தக் ஷதா, அகல்யா தலா 2 விக்கெட் எடுத்தனர்.புதுச்சேரி அணி 135 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.