வினு மான்கன்ட் கிரிக்கெட் போட்டி புதுச்சேரி அணி அபார வெற்றி
புதுச்சேரி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் நடத்தும் 19 வயதிற்குட்பட் டோருக்கு வினு மான்கன்ட் கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர் இந்தியா முழுதும் பல்வேறு இடங்களில் நேற்று துவங்கி வரும் 12ம் தேதி வரை நடக்கிறது.புதுச்சேரியில் இந்த தொடர் துத்திப்பட்டு சீகெம் மைதானம், லட்சுமி நாராயணா மருத்துவக்கல்லூரி மைதானத்திலும் நடக்கிறது. இதில் டெல்லி, மணிப்பூர், உத்தரபிரதேசம், ஹரியானா, குஜராத், ஜார்கன்ட் அணிகள் பங்கு பெறுகின்றன.இது போல் டில்லி ஏர் போர்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியில் புதுச்சேரி அணியும், அருணாச்சல பிரதேசம் அணி மோதின.முதலில் விளையாடிய புதுச்சேரி அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் குவித்தது. புதுச்சேரி அணியில் அபிநயன் 143 பந்தில், 16 பவுண்டரி, 7 சிக்ஸர் உடன் 180 ரன்கள் எடுத்தார். கடின இலக்குடன் தொடர்ந்து ஆடிய அருணாச்சல பிரதேசம் அணி 47.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ரன் எடுத்து தோல்வியடைந்தது. புதுச்சேரி அணி 171 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. நாளை 6ம் தேதி புதுச்சேரி - ராஜஸ்தான் அணிகள் மோத உள்ளன.