உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ஆடவர்களுக்கான ரஞ்சி கோப்பை புதுச்சேரி அணி வெற்றி

 ஆடவர்களுக்கான ரஞ்சி கோப்பை புதுச்சேரி அணி வெற்றி

வில்லியனுார்: ஆடவர்களுக்கான ரஞ்சி கோப்பைக்கானபோட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி புதுச்சேரி அணி வெற்றி பெற்றது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் புதுச்சேரி துத்திப்பட்டு சிஏபி மைதானத்தில் கடந்த 29ம் தேதி ஆடவருக்கான ரஞ்சி கோப்பைக்கான போட்டி துவங்கி நான்கு நாட்கள் நடந்தது. புதுச்சேரி அணியும், ராஜஸ்தான் அணியின் விளையாடியது. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 168 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. புதுச்சேரி அணி 349 ரன்கள் எடுத்தது. 148 ரன்களுடன் முன்னிலை பெற்றது. நேற்று நடந்த இரண்டாவது இன்னிங்ஸ் போட்டியில் ராஜஸ்தான் அணிமுதலில் விளையாடி 352 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. புதுச்சேரி அணி வீரர் கரன்கண்ணன் 6 விக்கெட்களும், சாகர் உதேசி 4 விக்கெட்களும் எடுத்தனர். 172 ரன்கள் வெற்றி இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கிய புதுச்சேரி அணி 172க்கு 5 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் கரன்கண்ணன் மொத்தம் 11 விக்கெட்டுக்களை எடுத்ததால், ஆட்டநாயகன் விருது பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை