உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / அரங்கனுார் பள்ளியில் வினாடி -வினா போட்டி

அரங்கனுார் பள்ளியில் வினாடி -வினா போட்டி

பாகூர் : அரங்கனுார் அரசு தொடக்கப்பள்ளியில், 'அறிந்ததும் அறியாததும்'என்ற தலைப்பிலான வினாடி- வினா நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு, தலைமையாசிரியர் கிருஷ்ணபிரியா தலைமை தாங்கினார். ஆசிரியர் அனிதா ராஜலட்சுமி வரவேற்றார். பணி நிறைவு பெற்ற விரிவுரையாளர் சேலியமேடு சபாபதி நடுவராக இருந்து 'அறிந்ததும் அறியாததும்' என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களை உள்ளடக்கிய வகையில், வினாடி - வினா நிகழ்ச்சியை நடத்தினார். தொடர்ந்து, சிறப்பான முறையில் பதில் கூறிய மாணவ -மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் பரிசுகளை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், ஆசிரியர்கள் அருணாஜோதி, இந்துமதி, காயத்திரி, நிஷா மற்றும் பள்ளி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை