உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி /  ராஜிவ் சதுக்கம் சிக்னலில் வெள்ளை வர்ணம் அடிப்பு

 ராஜிவ் சதுக்கம் சிக்னலில் வெள்ளை வர்ணம் அடிப்பு

புதுச்சேரி: சிக்னலில் விபத்து ஏற்படுவதை தடுக்க சாலையில் வெள்ளை வர்ணம் அடிக்கும் பணி நடந்தது. புதுச்சேரி ராஜிவ் சதுக்கம் சிக்னல் முக்கிய இடமாக உள்ளது. இந்த வழியாக ஜிப்மர் மருத்துவமனை மற்றும் சென்னைக்கு செல்லும் ஆயிரத்திற்கு மேற்பட்ட வாகனங்கள் கடந்து செல்கின்றன. சிக்னல் விளக்கு இருந்தும் விதிமுறைகளை மீறி செல்லும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. சிக்னலில் பச்சை நிற விளக்கு விழுவதற்குள்ளே மற்றொரு புறத்தில் நிற்கும் இரு சக்கர வாகனங்கள் புறப்பட்டு செல்வதால்விபத்து நடந்து வருகிறது. சிக்னல் முன் பகுதியில் மக்கள் நடந்து செல்லும் பகுதியில் வெள்ளை வர்ணம் இல்லாமல் இருப்பதால், வாகன விபத்தில் மக்கள் சிக்கி வருகின்றனர். விபத்தை தடுக்கும் வகையில், வடக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வேலயன் முன்னிலையில், ராஜிவ் சதுக்கம் சாலையில், மக்கள் நடந்து செல்லும் பகுதியில் வெள்ளை வர்ணம் அடிக்கும் பணி நடந்தது. இதே போல், இந்திரா சதுக்கம் உள்ளிட்ட முக்கிய சிக்னல் பகுதிகளிலும் மக்கள் நடந்து செல்லும் பகுதியில் வெள்ளை வர்ணம் அடிக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை